இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஏப்ரல், 2020

அரசூர் பகுதிகளில் வேகமெடுக்கும் மேம்பால பணிகள்...



ரூ.11.81 கோடியில் இரு மேம்பாலம்

Home

மக்கள் மனதில் மகிழ்ச்சி வெள்ளம்

சூலுார்:  அவிநாசி ரோட்டை கடக்க பல கி.மீ., சுற்றி வந்த, கிராம மக்களின் வேதனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இரு மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி ரோடு (என்.எச்., 544) செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. கணியூர், செல்லப்பம்பாளையம், ஊஞ்சப்பாளையம் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டதால், ரோட்டின் இரு பகுதிகளில் உள்ள கிராம மக்கள், எந்த பிரச்னையும் இல்லாமல் ஆறு வழிச்சாலையை கடக்கின்றனர்.6 கி.மீ., சுற்றுஆனால், கொள்ளுப்பாளையம், ஊத்துப்பாளையம், சங்கோதிபாளையம் உள்ளிட மூன்று கிராம மக்கள் மட்டும், ரோட்டை கடக்க முடியாமல், 6 கி.மீ., சுற்றி வர வேண்டிய நிலை இருந்தது. இதனால், பல ஆண்டுகளாக மக்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதி மக்களின் பிரச்னை குறித்து, பா.ஜ., நிர்வாகி முருகேசன், செல்வராஜ் மற்றும் கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்திருந்தனர்.கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி அளித்து, இரு பாலங்கள் கட்ட, ரூ.11.81 கோடி நிதி ஒதுக்கியது. மண் பரிசோதனை முடிந்து, பாலங்கள் கட்ட, நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குனர் சிவக்குமார், பா.ஜ., மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் மோகன் மந்திராஜலம், மாவட்ட நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, செந்தில்குமார், கோபால்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு பணிகள் வேகமாக துவங்கியுள்ளதால், மக்களின் மனதில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.கோழிப்பண்ணை அருகே, ரூ.10.56 கோடி செலவில், மேம்பாலம் கட்டப்படுகிறது. கொள்ளுப்பாளையம் பிரிவு அருகே வாகனங்கள் மேலே ஏறி, தனியார் பங்க் அருகே கீழே இறங்கி செல்லும்படி பாலம் அமைகிறது.ஊத்துப்பாளையம் பிரிவில், ரூ.1.25 கோடி செலவில் இரும்பிலான நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இரு பாலங்கள் அமைவதால், விபத்துகளும் இப்பகுதியில் குறையும்.




அரசூர்ஊராட்சி "கோழிப்பண்ணை"-பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் கோரிக்கை தொடர்பாக. பா.ஜ.க மாவட்ட பிரதிநிதியும் ,சமூகசெயற்பாட்டாளருமாகிய திரு.ஜெய்கிந்த் முருகேசன்.அவர்கள் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர்.பொன்.ராதாகிருஷ்ணன்- அவர்களை நேரில் சந்தித்து மேற்படி கோரிக்கை மனுவை வழங்கி, கோரிக்கை  தொடர்பாக விளக்கிப்பேசிய போது எடுத்தப்படங்கள்...




















































அரசூர் டாப்கோவில் சமூக ஆர்வலர்கள் ஆய்வு


         படம் :-அரசுக்கோழிப்பண்ணை வரைபடம்

அரசூர்ஊராட்சியில் அமைந்துள்ள 14-ஏக்கர் அளவிலான அரசூர்- டாப்கோ குஞ்சு பொறிப்பு நிறுவனத்தை  அப்பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள்  ஒவ்வொரு அறையாக ஒட்டுமொத்த கட்டிடங்களுக்குள்ளும் சென்று மிகத்துல்லியமாக அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தனர்...பலகோடி ரூபாய் மதிப்பிலான ஏராளமான கட்டிட அறைகளுக்குள் எந்த டாப்கோ தளவாடங்களும் இல்லை.  ஆனால் எவரும் காலூன்றி உள்ளே செல்ல முடியாத அளவுக்கு மனிதமலம் அனைத்து அறைகள்,பண்ணை கட்டிடங்களுக்குள்ளும் பெருமளவில் குவிந்து கிடப்பதாகவும், அதனையும் மீறி மலங்களின் மீது நடந்துசென்றே ஆய்வுசெய்ததாகவும் கூறும் சமூக ஆர்வலர்கள் இது தொடர்பாக டாப்கோ-குஞ்சுபொறிப்பு நிறுவன கட்டிடங்கள், வெற்று நிலங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தாங்கள் எடுத்த ஏராளமான புகைப்படங்கள்,காணொளிகளை வெளியிட்டு உள்ளனர்...   பலரும் பார்த்தறியாத டாப்கோ குஞ்சு பொறிப்பகத்தை , சமூகஆர்வலர்கள் வெளியிட்டுள்ள காணொளிகளை பார்த்தால் இன்றைய பேரவலம் நன்கு வெளிப்படுகிறது...

"வணங்காமண்  தமிழ் ஊடகம்" - என்ற நமது யூடுயூப் தேடுதளத்தில்  வெளியான பல்வேறு காணொளிகளில்  முக்கியமான சில காணொளிகளை இவ்வலைப்பதிவில் பொதுமக்கள், மக்கள்நல விரும்பிகளின் ஆக்கப் பூர்வமான பார்வைக்கு காட்சிப்படுத்துகிறோம்...

அரசூர், கணியூர் ஊராட்சிகளின் அனைத்துப் பொதுமக்களுக்கும்,விவசாயிகளுக்கும்,நிலத்தை தண்ணீர் இன்றி வெறுமனே வைத்துள்ள வர்களுக்கும்,மகளிர்சுய உதவிக்குழுக்கள்  மற்றும் குறைந்த செலவில் கால்நடைகளை வளர்த்து நவீனமுறை யுக்திகளை பயன்படுத்தி ,, சந்தைபடுத்தி லாபமீட்டவும் வழிகாட்டியாக,  மிகவும் பயனுள்ளதாக அமையப் போகின்ற -பசுந்தீவன அபிவிருத்தி அலகுடன் கூடிய "ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை"-மற்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மையத்தையும் இங்கு நிறுவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்...இதனால் உள்ளூர் பொதுமக்களுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு...கால்நடைத்துறையின் பல்வேறு திட்டங்களின் சாராம்சமே ஊரக பகுதி மக்களின் சுயமேம்பாட்டுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ,உதவியாக இருப்பதுதான் என்று வணங்காமண் குழு சமூகஆர்வலர்கள்  கூறினர்...

                                      காணொளி : 01

      (அரசுக்கோழிப்பண்ணை  முழு காணொளி)


காணொளி : 02 

   (டாப்கோ -வெளிமாவட்ட வணிகத் தொடர்புகள்)





























































புதன், 22 ஏப்ரல், 2020

சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய டாப்கோ

அரசூரில் சமூகவிரோதிகளின் கூடாரமாக விளங்கும் "அரசூர் டாப்கோ குஞ்சு பொறிப்பகம்"




         "வணங்காமண் விழிப்புணர்வு காணொளி"

அரசு கால்நடைத்துறைக்கு சொந்தமான 14-ஏக்கர் நிலத்தையும், பலகோடி ரூபாய் கட்டிடங்களையும் முழுமையாக சீரமைத்து "பசுந்தீவன -அபிவிருத்தியுடன் கூடிய ஒருங்கிணைந்த கால்நடைப்பண்ணையம்" மற்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொழில்பயிற்சி மையத்தையும் நிறுவிடக் கோரி  சமூகஆர்வலர்கள் தீவிர களப்பணி...!!

கோவைமண்டல கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர்.உயர்திரு.ர.பெருமாள்சாமி.அவர்கள்ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையம் மற்றும் Tanvas -தொழிற்சார் மையம் நிறுவ அனுமதிக்கலாம் என்றும் அதற்கு மிகவும் ஏற்புடைய சூழல் இருப்பதாகவும் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதால்...சமூக ஆர்வலர்களின் போராட்டம் வெற்றியை நோக்கி நகர்கிறது...

கோரிக்கைக்கு ஆதரவாகவும்,சமூகஆர்வலர்களின் முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாகவும், டாப்கோ-சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசூர்ஊராட்சி 10- மற்றும் 11-வது வார்டை சேர்ந்த அனைத்துப் பொதுமக்களும் படிவத்தில் தங்கள் கைபேசிஎண், இருப்பிட விபரத்துடன் கூடிய கையொப்பத்தையும் வழங்கினர்...









22/9/1966-ம் தேதியில் அன்றைய முதல்வர்.உயர்திரு.பக்தவச்சலம்.அவர்களின் ஆட்சியில் ,   மத்திய உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர். உயர்திரு.C.சுப்பிரமணியம்.BA.BL.  அவர்களால் முதன்முதலில் "மத்திய கால்நடை விந்து சேகரிப்பு மையமாக துவக்கிவைக்கப்பட்டது.




திங்கள், 20 ஏப்ரல், 2020

வணங்காமண் தமிழ்ஊடகம்

                          
                 

       "வணங்காமண் வலைப்பதிவகம் மீண்டும் உதயமாகிறது"


    
ணக்கம் நண்பர்களே...! வணங்காமண் குழுவின் வலைப்பதிவுகள் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் சிறிய மாறுதல்களுடன் இயங்கத்தொடங்கியுள்ளது...                                                                               

வணங்காமண் சமூகஆர்வலர்கள் -அனைத்து மக்கள்நல விரும்பிகளின் வாட்ஸ்அப் ஒருங்கிணைப்புக்குழுவில் பதிவேற்றப்படும் மிகமுக்கிய சமூகப்பிரச்சனைகள் மட்டும் நமது   "http://Vanangamansocial.blogsbot.com"  --எனும் இந்ததளத்தில் உடனுக்குடனே பதிவேற்றப்பட்டு வெளியாகும்...மேலும்  பொதுநிகழ்வுகள், சமூகஆர்வலர்களின் பதிவுகள் இதில் புகைப்படம், காணொளியுடன்  பதிவேற்றம் செய்யப்படும்... வணங்காமண் சமூகநலவிரும்பிகள் தங்களின் சமூகநலப் பதிவுகளை   
" Vanangamansocialwork@gmail.com "- என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது பிரதான வாட்ஸ்அப் செயலிக்கும் அனுப்பித்தரலாம்... 
                    
                                                                        -அன்புடன்,
                                                                        வணங்காமண் தமிழ்ஊடகம்  குழு